கோலாலம்பூர்: இனிமேல், மலேசியாவில் செய்தி வெளியீட்டாளர்கள் முகநூலில் கட்டுரைகளை வெளியிடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அண்மையில் உண்மையைக் கண்டறியும் திட்டத்தை பேஸ்புக் நிறுவனம் ஏஎப்பி நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தி உள்ளது.
இன்று புதன்கிழமை தொடங்கும் இந்த திட்டம், இணையத்தில் தவறான தகவல்கள் பரவுவதைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக மலேசிய பேஸ்புக் நிறுவன மேலாளர் ஆலிஸ் புடிசாட்ரிஜோ கூறினார்.
முகநூலில் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் உள்ளிட்ட செய்திகளின் துல்லியத்தை ஏஎப்பி மதிப்பாய்வு செய்யும்.
சட்டவிரோத உள்ளடக்கத்தை எதிர்த்துப் போராடுவதும், முகநூலில் போலி செய்திகளை வெளியிடுவதிலிருந்து தடுக்கவும் இது உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், சமூக தளங்களில் வாசகர்களால் உயர் தரமான செய்திகளைப் பெறுவதை உறுதி செய்வதற்கான அவர்களின் முயற்சிகளில் பெரும் பகுதியாக இது அமைகிறது என்று அவர் கூறினார்.