இருப்பினும், அக்கூடுதல் தனிநபர்களின் பெயர்கள் மற்றும் நிறுவனங்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
இதற்கு முன்னர் வெளிப்படுத்தப்பட்ட 41 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களைத் தவிர, பணத்தைப் பெற்ற அல்லது அழைக்க காரணமான இருப்பவர்கள் அனைவரையும் எம்ஏசிசி அழைத்து வாக்குமூலங்களைப் பெறும் என்று அவர் தெளிவுப்படுத்தினார்.
இதற்கிடையே, நஜிப்பின் கணக்கிற்கும் பின்னர் தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் சுமார் 270 மில்லியன் 1எம்டிபி பணம் மாற்றப்பட்டதை மீட்டெடுக்க, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 56-இன் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கடந்த ஜூன் 21-ஆம் தேதி ஊழல் தடுப்பு ஆனையத் தலைவர் லத்தீஃபா கோயா கூறியிருந்தார்.