Home நாடு மேலும் 33 கூடுதல் ஊழல் குற்றச்சாட்டுகள் சாஹிட் மீது சுமத்தப்பட்டன!

மேலும் 33 கூடுதல் ஊழல் குற்றச்சாட்டுகள் சாஹிட் மீது சுமத்தப்பட்டன!

518
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி மேலும் 33 ஊழல் குற்றச்சாட்டுகளை இன்று வியாழக்கிழமை ஷா அலாம் அமர்வு நீதிமன்றத்தில் எதிர் நோக்கினார்.  அக்குற்றங்களை மறுத்து அவர் நீதிமன்றத்தில் விசாரணை கோரினார்.

நஜிப் ரசாக் நிருவாகத்தின் கீழ் உள்துறை அமைச்சராக இருந்த சாஹிட் அல்ட்ரா கிரானா செண்டெரியான் பெர்ஹாட் நிறுவனத்திடமிருந்து 42.7 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான இலஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலும் கஜாங்கில் உள்ள கான்ட்ரி ஹைட்ஸ்சில் அவர் இப்பணங்களைப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 165-இன் கீழ் அவர் ஒரு பொது ஊழியராக தனது அன்றைய அமைச்சகத்துடன் ஒரு வணிக பரிவர்த்தனையில் ஈடுபட்டு மதிப்புமிக்க ஒன்றைப் பெற்றார் என்பது தொடர்பில் அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் பிரிவு 16 () (பி) கீழ் ஊழல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், சாஹிட்டுக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இலஞ்சம் பெற்ற தொகையை விட ஐந்து மடங்கு குறையாத அபராதமும் விதிக்கப்படும்.

இதற்கிடயே, நேற்று புதன்கிழமை வெளிநாட்டு விசா அமைப்பு (விஎல்என்) சம்பந்தப்பட்ட 4.2 மில்லியன் சிங்கப்பூர் டாலர் மதிப்புலான ஊழல் குற்றச்சாட்டுகளை அகமட் சாஹிட் ஹமீடி எதிர் நோக்கினார். இன்றைய இந்த குற்றச்சாட்டுகளுடன் தற்போது அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை 87-ஆக உயர்ந்துள்ளது.