Home English News ஜூலை 30 – மாமன்னர் அதிகாரபூர்வமாக அரியணை அமரும் நாள் பொது விடுமுறை

ஜூலை 30 – மாமன்னர் அதிகாரபூர்வமாக அரியணை அமரும் நாள் பொது விடுமுறை

710
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா நாட்டின் 16-வது மான்னராக அதிகாரபூர்வமாக அரியணை அமரும் நாளான ஜூலை 30-ஆம் தேதி பொதுவிடுமுறையாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் இந்த முடிவை அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் இஸ்மாயில் பக்கார் அறிக்கை ஒன்றின் வழி அறிவித்தார். தீபகற்ப மலேசியா, கூட்டரசுப் பிரதேச மாநிலம் ஆகியவை இந்த முடிவைப் பின்பற்றும்.

சபா, சரவாக் மாநிலங்கள் இந்த உத்தரவுக்கு ஏற்ப தங்களின் மாநிலங்களின் அரசியல் சாசன அடிப்படையில் நடவடிக்கை எடுத்து ஜூலை 30-ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவிக்கும் உத்தரவுகளைப் பிறப்பிக்கும்.