Home உலகம் கிரிக்கெட் : இந்தியாவைத் தோற்கடித்தது இங்கிலாந்து!

கிரிக்கெட் : இந்தியாவைத் தோற்கடித்தது இங்கிலாந்து!

1013
0
SHARE
Ad

பெர்மிங்ஹாம் (இங்கிலாந்து) – உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளுக்கான வரிசையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து இந்தியாவைத் தோற்கடித்து அரையிறுதி ஆட்டத்திற்குச் செல்லும் தனது வாய்ப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

நாணயத்தைச் சுண்டிப் போட்டதில் வெற்றி பெற்ற இங்கிலாந்து பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. முதல் பாதி ஆட்டத்தில் அபாரமாக விளையாடி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 337 ஓட்டங்களைக் குவித்தது.

அடுத்து இரண்டாவது பாதி ஆட்டத்தில் 338 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு விளையாடிய இந்தியா 50 ஓவர்களை நிறைவு செய்தபோது 5 விக்கெட்டுகளை இழந்து 306 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து இங்கிலாந்து 31 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.

அடுத்து இங்கிலாந்து, நியூசிலாந்துடனான ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரையிறுதி ஆட்டத்திற்குத் தேர்வு பெற முடியும்.

நேற்றைய ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடிய ரோஹிட் ஷர்மா 102 ஓட்டங்கள் எடுத்து 2019 உலகக் கிண்ணப் போட்டிகளில் மூன்றாவது சதமடித்த பெருமையைப் பெற்றிருக்கிறார்.

இதுவரை எந்த ஆட்டத்திலும் தோல்வி காணாத வீராட் கோலி தலைமையிலான இந்திய அணி நேற்றைய ஆட்டத்தில் முதன் முறையாகத் தோல்வியைத் தழுவியது. அடுத்து ஜூலை 2-ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா வங்காளதேசத்தைச் சந்திக்கிறது.

இந்தியா இன்னும் விளையாட வேண்டிய 2 ஆட்டங்களில் ஒரே ஒரு புள்ளியைப் பெற்றாலே போதும் – அரையிறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற்றுவிடும்.

இன்று நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டிகளின் வரிசையிலான மற்றொரு ஆட்டத்தில் இலங்கையும், மேற்கிந்தியத் தீவுகள் அணியும் மோதுகின்றன.