சென்னை: நடிகர் விஷாலின் அலுவலகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சேவை வரித்துறை சோதனையில் அவர் ஒரு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பல முறை சம்மன் அனுப்பியும் விஷால் தரப்பில் பதில் ஏதும் வெளியிடப்படவில்லை. மேலும், விஷால் மீது அரசு ஊழியர் உத்தரவை மதிக்காமல் இருத்தல் என்ற பிரிவின் அடிப்படையில் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 2018 –ஆம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி விஷால் நீதிமன்றத்தில் நேர் வந்திருந்தார். அதனை அடுத்து மீண்டும் நேற்று செவ்வாய்க்கிழமை நேர் வரச் சொல்லி சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், ழும்பூர் பொருளாதார குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி முன்பு விஷால் நிறுத்தப்பட்டார். விசாரணை இறுதியில் இந்த வழக்கை நீதிபதி ஆகஸ்ட் 1 –ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.