Home நாடு பெர்சாத்து கட்சியின் மூன்று முக்கிய பதவிகளுக்கு போட்டியில்லை!- முக்ரிஸ்

பெர்சாத்து கட்சியின் மூன்று முக்கிய பதவிகளுக்கு போட்டியில்லை!- முக்ரிஸ்

674
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இவ்வாண்டு நடக்க இருக்கும் கட்சித் தேர்தலில் மூன்று உயர்மட்ட பதவிகளுக்கு போட்டிகள் இருக்காது என்று ஒன்றுபட அடிமட்ட உறுப்பினர்கள் விரும்புவதாக பெர்சாத்து கட்சித் துணைத் தலைவர் முக்ரிஸ் மகாதீர் கூறினார்.

பெர்சாத்துவின் தற்போதைய அமைப்புத் தலைவராக இருப்பது துன் டாக்டர் மகாதீர் முகமட் பாகோ நாடாளுமன்ற உறுப்பினரும் உள்துறை அமைச்சருமான மொகிதின் யாசின் தலைவர் பதவியையும், துணைத் தலைவர் பதவியினை முக்ரிஸ் மகாதீர் முகமட் வகிக்கிறார்.

அமைப்புத் தலைவர் பதவிக்கு சவால் தரும் வகையில் இன்னும் யாரும் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கவில்லையென்றும், அதே நேரத்தில் அவரது தந்தை இந்த பதவியைத் தக்கவைக்க ஆர்வமாக உள்ளதாகவும் முக்ரிஸ் கூறினார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், முக்ரிஸ் துணைத் தலைவர் பதவியைப் தக்க வைத்துக் கொள்ள இருப்பதாகவும் கூறினார்.

இந்த ஆண்டு சுமூகமான தேர்தலை உறுதி செய்வதற்காக கட்சியின் அவசர பொதுக் கூட்டம் வருகிற ஜூலை 20-ஆம் தேதி நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.