Home நாடு மஇகா, மசீச தலைவர்களை சந்தித்த சாஹிட்!

மஇகா, மசீச தலைவர்களை சந்தித்த சாஹிட்!

701
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ கட்சியை தாம் மீண்டும் வழிநடத்தப்போவதாகக் கூறிய டாக்டர் சாஹிட் ஹமீடியின் முடிவினை பலர் ஆதரித்து வரும் வேளையில், கடந்த திங்கட்கிழமை அம்னோ கட்சியின் துணைத் தலைவர் முகமட் ஹசானை சாஹிட் சந்தித்தார்.

இதற்கு அடுத்ததாக நேற்று செவ்வாய்க்கிழமை தேசிய முன்னணியின் முக்கிய பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மஇகா கட்சித் தலவைவர் டான்ஶ்ரீ எஸ்.விக்னேஸ்வரன் மற்றும் மசீச கட்சித் தலைவர் வீ கா சியோங் ஆகியோரை சாஹிட் சந்தித்தார்.

சுமார் 2 மணி நேரங்கள் அவர்களின் சந்திப்பு நீடித்ததாகக் கூறப்படுகிறது. நீண்ட நாட்கள் விடுமுறைக்குப் பிறகு அவர் மீண்டும் அம்னோவின் தலைவர் பதவியை ஏற்றிருபது குறிப்பிடத்தக்கது. பதவியை ஏற்றப் பிறகு கூட்டணிக் கட்சிகளுடன் சந்திப்பினை நடத்தியது கூட்டணிக் கட்சி உறுப்பினர்களிடையே பாராட்டப்பட்டு வருகிறது.   

#TamilSchoolmychoice

ஆறு மாதங்களுக்கும் மேலாக விடுமுறைக்கு பின்னர் அம்னோ தலைவர் பதவியை மீண்டும் தாம் ஏற்றுக் கொள்வதாக அகமட் சாஹிட் அண்மையில் அறிவித்திருந்தார்.