Home இந்தியா மாநிலங்களவைக்கு வைகோவை முன்மொழிந்து மு.க.ஸ்டாலின் கையெழுத்து

மாநிலங்களவைக்கு வைகோவை முன்மொழிந்து மு.க.ஸ்டாலின் கையெழுத்து

941
0
SHARE
Ad
வைகோ – ஸ்டாலின் கோப்புப் படம்

சென்னை – இன்று நடைபெற்ற வைகோ மீதான தேசத் துரோக வழக்கில் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அவர் போகப் போவது மத்திய சிறைக்கா அல்லது மாநிலங்களவைக்கா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வைகோ மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன என்று கூறிய நீதிபதி இப்போதே தண்டனையைக் கூறிவிடவா அல்லது உங்களுக்கு அவகாசம் வேண்டுமா எனக் கேட்க, வைகோவோ, இப்போதே தண்டனையை அறிவியுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

வைகோவுக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார் நீதிபதி. அதைத் தொடர்ந்து பத்தாயிரம் ரூபாய் அபராதத்தைச் செலுத்திய வைகோ, தன் மீதான தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்தார்.

#TamilSchoolmychoice

அவரது முறையீட்டுக்கு ஏற்ப அவருக்கான தண்டனையை ஒரு மாதத்திற்கு ஒத்தி வைத்தார் நீதிபதி.

இந்திய நாடாளுமன்ற மேல்சபையான மாநிலங்களவையில் வைகோவின் குரல் விரைவில் ஒலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் வைகோவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அவரது வேட்புமனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளுமா அல்லது நிராகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இருப்பினும் வைகோவுக்காக கூட்டணி சார்பில் மாநிலங்களவைக்கு ஓரிடத்தை ஒதுக்கியுள்ள திமுகவின் சார்பில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் வைகோவின் வேட்புமனுவை முன்மொழிந்து கையெழுத்திட்டிருக்கிறார்.