Home கலை உலகம் பிக்பாஸ் 3 – மதுமிதா காப்பாற்றப்பட்டார்

பிக்பாஸ் 3 – மதுமிதா காப்பாற்றப்பட்டார்

1378
0
SHARE
Ad

சென்னை – தற்போது தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளியேறி வரும் பிக்பாஸ் – 3 நிகழ்ச்சியில் இந்த வாரம் 7 பேர் வெளியேற்றப்பட சக பங்கேற்பாளர்களால் பரிந்துரைக்கப்பட்டனர்.

முதல் வாரத்திலேயே 7 பேர் வெளியேற்றப்பட பரிந்துரைக்கப்பட்டிருப்பதால் நிகழ்ச்சியில் விறுவிறுப்பு கூடி, யார் முதல் ஆளாக வெளியேறப் போகிறார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெளியேற்றப்பட பரிந்துரைக்கப்பட்டிருக்கும் அந்த 7 பேர்  பின்வருமாறு:

  1.  நடிகர் கவின்
  2. சாக்‌‌ஷி
  3. சரவணன்
  4. பாத்திமா பாபு
  5. இயக்குநர் சேரன்
  6. மீரா
  7. மதுமிதா
#TamilSchoolmychoice

இவர்களில் யார் இரசிகர்களால் வெளியேற்றப்படப் போகிறார் என்ற ஆர்வம் எழுந்துள்ளது. நேற்று சனிக்கிழமை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், முதல் வாரத்திலேயே மிக அதிகமான எண்ணிக்கையில் வாசகர்கள் வாக்கெடுப்பில் பங்கெடுத்துள்ளனர் என அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து 7 பேரில் காப்பாற்றப்பட்ட ஒருவரின் பெயரை மட்டும் சொல்கிறேன் என்று கூறிவிட்டு “மதுமிதா காப்பாற்றப்பட்டார்” என்று மட்டும் கூறி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.

அதைக் கேட்டதும் மதுமிதா ஓவென்று கதறி அழுது அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியிலிருந்து வெளியேறப்போகும் முதல் பிரபலம் யார் என்பது தெரிந்து விடும்.