Home நாடு நஜிப் மீதான 1எம்டிபி விசாரணை ஆகஸ்ட் 19-ஆம் தேதி தொடங்கும்!

நஜிப் மீதான 1எம்டிபி விசாரணை ஆகஸ்ட் 19-ஆம் தேதி தொடங்கும்!

692
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட 1எம்டிபி வழக்கு விசாரணையை ஒத்திவைக்க அரசு தரப்பு விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

1எம்டிபி விவகார சம்பந்தமான விசாரணை ஆகஸ்ட் 19-ஆம் தேதி தொடங்கும் என்று நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்வேரா முடிவு செய்துள்ளார்.

அதிகார அத்துமீறல், ஊழல் மற்றும் பணமோசடி ஆகிய ஏழு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நஜிப் மீதான வழக்கு விசாரணைக்கு வழிவகுக்கும் வகையில், 1எம்டிபி விசாரணை தேதியை ஒத்திவைக்குமாறு நீதிபதி கோலினிடம் மூன்றாவது முறையாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் விண்ணப்பித்தும் அது தோல்வியில் முடிந்துள்ளது.