Home நாடு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடர்பில் பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கைது!

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடர்பில் பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கைது!

720
0
SHARE
Ad

ஈப்போ: இந்தோனிசிய பணிப்பெண் சம்பந்தப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு உதவ பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை அவர் கைது செய்யப்பட்டதாக பேராக்மாநில காவல் துறைத் தலைவர் டத்தோ ராசாருடின் ஹுசைன் தெரிவித்தார்.

நியாயமான காவல் துறை விசாரணையை உறுதி செய்வதற்காகவும், எங்கள் விசாரணைக்கு உதவுவதற்காகவும் நாங்கள் நேற்று அவரை கைது செய்துள்ளோம்என்று பெர்னாமாவிடம் தெரிவித்ததாக அச்செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

#TamilSchoolmychoice

எவ்வாறாயினும், கைது செய்யப்பட்டது தொடர்பில் அவர் விரிவாக எதுவும் குறிப்பிடவில்லை. கூடிய விரைவில் ஓர் அறிக்கையை வெளியிடுவதாக அவர் கூறினார்.

நேற்று பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவர் இந்தோனிசிய பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக ஜெலாபாங் காவல் நிலையத்தில் அப்பெண்மணி புகார் அளித்திருந்ததாக மலேசியாகினி செய்தி வெளியிட்டிருந்தது. இந்த வழக்கு தண்டனைச் சட்டம் 376-வது பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.