Home நாடு தேமுவின் ஆலோசனைக் குழுத் தலைவராக நஜிப் நியமனம்!

தேமுவின் ஆலோசனைக் குழுத் தலைவராக நஜிப் நியமனம்!

622
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் மற்றும் தேசிய முன்னணியின் தலைவருமான நஜிப் ரசாக் நேற்று செவ்வாய்க்கிழமை அக்கூட்டணியின் ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

பதவியேற்பை அறிவித்த தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர், இந்த முடிவை கட்சித் தலைவர்களால் ஒருமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டதாகக் கூறினார்.

தேசிய முன்னணி கூட்டணிக்கு மக்களின் ஆதரவை மீட்டெடுக்கும் பணியை நஜிப் மேற்கொள்வார் என்று தெங்கு அட்னான் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த 14-வது பொதுத் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மே 12-ஆம் தேதி அம்னோ தலைவர் மற்றும் தேசிய முன்னணி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக நஜிப் அறிவித்திருந்தார்.