
கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (ஜூலை 10) 94 வயதை எட்டிய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், நாட்டிற்கான தனது பணிகளை முடிக்க வேண்டும் என்பதே தனது பிறந்தநாள் விருப்பமாகக் கூறியுள்ளார்.
“எனது பிறந்தநாள் ஆசை மிகவும் எளிதானது, மலேசியாவை மீட்டெடுக்கும் பாதையில் எனது வேலையை முடிக்க முடியும். இந்த நாட்டிற்கு சேவை செய்வது ஒரு பாக்கியம் மற்றும் மரியாதை” என்று மகாதீர் தனது சமூகப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அதே நேரத்தில் அனைத்து நலம் விரும்பிகளுக்கும் தனது நன்றியை அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தலைமை நிருவாகிகளாக மூன்று பேர் மட்டுமே 90 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்துள்ளனர். அவர்களில் பிரதமர் மகாதீரே மூத்தவர்.
பிரதமர் மகாதீரின் மனைவியான டாக்டர் சித்தி ஹஸ்மா அலி வருகிற வெள்ளிக்கிழமை 93 பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார்.