Home கலை உலகம் எனை நோக்கி பாயும் தோட்டா ஜூலை 26 திரையரங்குகளில் பாய்கிறது!

எனை நோக்கி பாயும் தோட்டா ஜூலை 26 திரையரங்குகளில் பாய்கிறது!

990
0
SHARE
Ad

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் எப்போது வெளிவரும் என எதிர்பார்த்து கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளிவரும் என அறிவித்து பிறகு அதுவும் தயாரிப்பாளர் கடன் பிரச்சனையால் தள்ளிப் போடப்பட்டது.

படம் வெளிவர வாய்ப்பில்லை என்று இரசிகர்கள் எண்ணிய நிலையில், தற்போது வருகிற ஜூலை 26-ஆம் தேதி இப்படம் திரைக்கான உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2016-இல் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இரசிகர்களிடம் இருந்தது.

2017-இல் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கௌதம் மேனனின் பணப்பிரச்சனைகளால் திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கௌதம் மேனன் விக்ரமுடன் துருவ நட்சத்திரம் படம் இயக்கப் போய்விட இப்படம் முழுமையாக நின்று விட்டது. இதனால் இரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

#TamilSchoolmychoice

பின்பு பல மாதங்களுக்கு பிறகு எனை நோக்கி பாயும் தோட்டா திரைக்கு வரும் என பேசப்பட்டது. அப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியாகி இரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், மீண்டும் இப்படம் பணப்பிரச்சனைகளில் சிக்கியது.

இப்படத்தின் முழு முன்னோட்டக் காணொளி  வரும் வாரங்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது