கோலாலம்பூர்: நேற்று வியாழக்கிழமை இஸ்தானா நெகாராவில் மாமன்னர் தம்பதிகள் சிறப்பு பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றினை பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு ஏற்பாடு செய்திருந்ததாக இஸ்தானா நெகாராவின் இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ விருது வழங்கும் விழாவுக்குப் பிறகு இந்த அதிர்ச்சியை மாமன்னர் தம்பதிகள் பிரதமர் தம்பதியினருக்கு தந்தனர்.
கேக்கின் மூலத்தில் “எ ஸ்ட்ரீட் கேட் நேம்ட் பாப்” என்ற புத்தகம் வழங்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது.
ஜேம்ஸ் போவனின் கை வண்ணத்தில் உருவான அப்புத்தகம் இலண்டன் வீதிகளில் வீடற்ற இசைக்கலைஞர் பூனையுடனான நட்பை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது. போதைப் பழக்க வழக்கங்களுக்கு ஆளாகிய பின்னர் தனது பூனை அவரது வாழ்க்கையை மீண்டும் மீட்டெடுக்க உதவியது குறித்தது அக்கதை.
கடந்த ஆண்டு கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் போது டாக்டர் மகாதீர் “எ ஸ்ட்ரீட் கேட் நேம்ட் பாப்” என்ற நூல் அவருக்கு பிடித்த வாசிப்பு என்று முகநூலில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.