Home வணிகம்/தொழில் நுட்பம் 3 மலேசிய நிறுவனங்களுக்கு போர்ப்ஸ் ஆசியாஸ் பெஸ்ட் அண்டர் எ பில்லியன் பட்டியலில் இடம்!

3 மலேசிய நிறுவனங்களுக்கு போர்ப்ஸ் ஆசியாஸ் பெஸ்ட் அண்டர் எ பில்லியன் பட்டியலில் இடம்!

848
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 2019-ஆம் ஆண்டுக்கான போர்ப்ஸ் ஆசியாஸ் பெஸ்ட் அண்டர் எ பில்லியன் பட்டியலில், 200 சிறந்த செயல்திறன் கொண்ட பொது நிறுவனங்களுக்கு மத்தியில் மூன்று மலேசிய நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.

மூன்று நிறுவனங்களும் மொத்தம் 19,000 நிறுவனங்களை வென்று, இலாபம், வளர்ச்சி மற்றும் சுமாரான கடன்பாடு ஆகியவற்றிற்காக போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த பட்டியலில் இடம்பெற்ற நிறுவனங்கள் தங்கள் வருடாந்திர நிகர இலாபம் மற்றும் விற்பனையில் சராசரியாக 50 விழுக்காட்டுக்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. அவர்களின் சமீபத்திய நிதியாண்டில் முறையே 10 பில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 54 பில்லியன் அமெரிக்க டாலர் வரை அவர்களின் இலாபம் கணக்கிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

விட்ராக்ஸ்சின் விற்பனை மற்றும் நிகர வருமானம் முறையே 98 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 26 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், பென்டாமாஸ்டர் முறையே 105 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 23 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், எல்சாஃப்ட் முறையே 19 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் பதிவு செய்துள்ளன.

2019-ஆம் ஆண்டுக்கான பட்டியலில் உள்ள 200 நிறுவனங்களில் 149 நிறுவனங்கள் புதியவை.