கோலாலம்பூர்: 1எம்டிபி ஊழல் விவகாரத்தில் முன்னாள் அரசாங்க தலைமை வழக்கறிஞர் முகமட் அபாண்டி அலியின் பங்கு குறித்து ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங் அளித்த கட்டுரை தொடர்பாக அபாண்டி, அவருக்கு எதிராக 10 மில்லியன் ரிங்கிட்டுக்கான பொது பாதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
மலேசியாகினியில் எம்பி ஸ்பிக்ஸ் எனும் பகுதியில் கிட் சியாங் வெளியிட்ட ஒரு கட்டுரை அபாண்டியை சிறுமைப் படுத்தி பேசியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அபாண்டி நேர்மை மற்றும் ஒழுக்கம் இல்லாதவர் என்று கிட் சியாங் அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசாங்க தலைமை வழக்கறிஞராக பதவியை வகிக்க முக்கியமான நெறிமுறைகளின் தொழில்முறை நெறிமுறை இயல்பு மற்றும் பிற நெறிமுறைகள் அவரிடம் இல்லை என்றும் கிட் சியாங் குறிப்பிட்டிருந்தார்.
அதிகாரத்தை அத்துமீறியதாகவும், வழக்கறிஞராக தனது கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அபாண்டி தோல்வியடைந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.