Home நாடு பாலியல் தொடர்பான காணொளியை பரப்பியதற்காக ஹசிக் மற்றும் ஐவர் கைது!

பாலியல் தொடர்பான காணொளியை பரப்பியதற்காக ஹசிக் மற்றும் ஐவர் கைது!

786
0
SHARE
Ad
படம்: நன்றி – மலேசியாகினி

கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சரான அஸ்மின் அலி தொடர்புடையதாக கூறப்படும் ஓரினச் சேர்க்கை காணொளி தொடர்பான விசாரணைகளுக்கு உதவ ஹசிக் அப்துல்லா அப்துல் அஜீஸுக்கு ஆறு நாட்கள் தடுப்புக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

மற்ற ஐவரும் நேற்று இரவு ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட பின்னர் இன்று திங்கட்கிழமை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் (ஜேஎஸ்ஜே) ஹுசிர் முகமட், இன்று காலை கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இருந்து தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டதாக தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 292 ஏ கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக இந்த  அறுவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த பிரிவு ஆபாசமான பொருட்களின் விநியோகத்துடன் தொடர்புடையதாகும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.

ஓர் அமைச்சருடன் இணைக்கப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளியை இட்டுக்கட்டியதற்கும் பரப்புவதற்கும் பின்னால் உள்ள சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல் துறைத் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

காணொளியில் இருப்பது தாம்தான் என்று ஹசிக் ஒப்புக்கொண்ட நிலையில், அஸ்மின் தாம் அதில் சம்பந்தப்படவில்லை என்று மறுத்துள்ளார்.