Home இந்தியா சந்திரயான்-2 : தொழில் துட்பக் காரணமாக விண்ணில் செலுத்துவதிலிருந்து தற்காலிகமாக நிறுத்தம்!

சந்திரயான்-2 : தொழில் துட்பக் காரணமாக விண்ணில் செலுத்துவதிலிருந்து தற்காலிகமாக நிறுத்தம்!

759
0
SHARE
Ad

புது டில்லி: உலக நாடுகளிலேயே முதல் முறையாக நிலவின் தென் துருவ பகுதிகளை ஆராயும் முயற்சியில் இந்தியா இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக சந்திரயான்– 2 விண்கலத்தை இந்தியா உருவாக்கி வந்த நிலையில் அது இன்று திங்கட்கிழமை அதிகாலையில் விண்ணில் செலுத்தப்பட இருந்தது.

ஆயினும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திரயான்- 2 விண்கலத்தை விண்ணில் பாய்ச்சுவதை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த திட்டம், தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பாகுபலி ராக்கெட் என்றழைக்கப்படும் மார்க் 3- மூலம் சந்திரயான் –2 இன்று திங்கட்கிழமை அதிகாலை 2.51-க்கு (இந்திய நேரப்படி) நிலவுக்கு செலுத்தப்பட இருந்தது. அதற்கு சுமார் 56 நிமிடங்களுக்கு முன்பாக தொழில்நுட்ப கோளாறு இருந்ததை விஞ்ஞானிகள் உறுதி செய்தனர்.

#TamilSchoolmychoice

இதையடுத்து தற்காலிகமாக சந்திரயான்– 2 திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.