Home நாடு பாசிர் கூடாங்: கூடுதலாக 18 சட்டவிரோத ஆலைகள் மூடப்படும்!

பாசிர் கூடாங்: கூடுதலாக 18 சட்டவிரோத ஆலைகள் மூடப்படும்!

754
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: பாசிர் கூடாங்கில் 18 சட்டவிரோத ஆலைகளை ஜோகூர் அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளன நிலையில் அவற்றை மூட நடவடிக்கை எடுக்கத் தொடங்கி உள்ளதாக ஜோகூர் மாநில சுற்றுச்சூழல் துறை (ஜெஏஎஸ்) இயக்குனர்வான்அப்துல்லத்தீப்வான்ஜாபார்கூறினார்.

ஜெஏஎஸ்சும் மாவட்ட நில அலுவலகம் மற்றும் பாசிர் கூடாங் நகராட்சி மன்றமும் (எம்பிபிஜி) அத்தொழிற்சாலைகளை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவை பெரும்பாலும் அரசுக்கு சொந்தமான நிலத்தைப் பயன்படுத்துகின்றன என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974 அடிப்படையில் மாசுப்படித்தியதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டவிரோதமாக இயங்கும் தொழிற்சாலையை மூடுவதற்கு எம்பிபிஜிக்கு அதிகாரம் உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதுவரை நாங்கள் மூன்று தொழிற்சாலைகளை சரிபார்த்து மூடிவிட்டோம். 250 தொழிற்சாலைகளை சரிபார்க்கும் இலக்கு இருந்தபோதிலும் எங்கள் நடவடிக்கைகள் தொடரும், “என்று அவர் மேற்கோளிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம், பாசிர் கூடாங்கில் உள்ள மாணவர்கள் காற்று மாசுபாடு காரணமாக வாந்தி மற்றும் மூச்சுத் திணறல் அறிகுறிகளை அனுபவித்தனர். இரண்டு மாதங்களுக்கு முன்னர் கிம் கிம் ஆற்று இரசாயன மாசுபாடு காரணமாக இதே மாதிரியான சூழல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு சம்பவங்களில் பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காவல் துறையில் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.