Home நாடு 42 மில்லியன் பணம் 1 மலேசியா மக்கள் அறக்கட்டளையிலிருந்து வரவில்லை!

42 மில்லியன் பணம் 1 மலேசியா மக்கள் அறக்கட்டளையிலிருந்து வரவில்லை!

1066
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நஜிப் ரசாக்கின் இரண்டு அம்பேங்க் வங்கிக் கணக்குகளில் சேர்க்கப்பட்ட 42 மில்லியன் ரிங்கிட் பணம் 1 மலேசியா மக்கள் அறக்கட்டளையிலிருந்து வரவில்லை என்று அம்பேங்க் முன்னாள் தலைமை நிருவாக அதிகாரி உங் சு லிங் சாட்சியமளித்தார்.

அந்த நேரத்தில் நஜிப்பின் அந்தரங்கச் செயலாளர் அஸ்லின் அலியாஸால் 1எம்டிபியின் துணை அமைப்புகளான ஏஷான் பெர்டானாதானாவை அம்பேங்கின் கணக்கிற்கு அப்பணத்தை மாற்றுமாறு கூறியதாக உங் கூறினார்.

இது கடந்த டிசம்பர் 2014 மற்றும் பிப்ரவரி 2015-இல் இரண்டு முறை செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதின்று தன்னை அஸ்லின் தொடர்பு கொண்டதாகவும், 880 மற்றும் 906-இல் முடிவடையும் அம்பேங்கின் கணக்குகளுக்கு 27 மில்லியன் மற்றும் 5 மில்லியன் ரிங்கிட்டை மாற்றுமாறு ஏஷான் பெர்டானா தலைமை நிருவாக அதிகாரி சம்சுல் அன்வார் சுலைமானுக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் அஸ்லின் கூறியதாக உங் கூறினார்.

இக்கணக்கு நஜிப்பிற்கு சொந்தமானது என்று அவருக்குத் தெரியாது என்று உங் குறிப்பிட்டார்.