Home கலை உலகம் அடுத்த ஜேம்ஸ் பாண்ட கருப்பின பிரிட்டன் நடிகையா?

அடுத்த ஜேம்ஸ் பாண்ட கருப்பின பிரிட்டன் நடிகையா?

755
0
SHARE
Ad

இலண்டன்: புதிதாக வெளிவர இருக்கும் ஜேம்ஸ் பாண்ட் 007 திரைப்படத்திற்குப் பிறகு அடுத்த ஜேம்ஸ் பாண்டாக பிரிட்டனைச் சேர்ந்த கருப்பின பெண் நடிகையான லஷனா லிஞ்ச் அப்பாத்திரத்தை ஏற்பார் என்று டெய்லி மெயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) செய்தி வெளியிட்டிருந்தது.

இது குறித்து பல கருத்துகள் இரசிகர்கள் மற்றும் ஹாலிவுட் நடிகர் நடிகைகள் மத்தியில் வெளியிடப்பட்டாலும், இறுதியான முடிவாக இது இருக்குமா என்பது கேள்விக்குறியே என்று ஸ்கிரீன் ரேண்ட் குறிப்பிட்டுள்ளது.

கறுப்பின பிரிட்டிஷ் நடிகையின் நடிப்பு பாண்ட் இரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அதே வேளையில், ஹாலிவுட்டில் பன்முகத்தன்மை மற்றும் பாலின சமத்துவம் இருக்க வேண்டும் என்ற அழைப்பிற்கு தயாரிப்பாளர்கள் தலைவணங்குவார்களா என்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

#TamilSchoolmychoice

51 வயதான கிரெய்க், பாண்ட் திரைப்படங்களிலிருந்து வெளியேற விரும்புவதால், இது ஒரு மாற்றத்திற்கான வாய்ப்பாகும் என்றும், கருப்பின நடிகர் இட்ரிஸ் எல்பா, 46, இப்பொறுப்பினை ஏற்க வேண்டும் என்ற பேச்சும் வெளிப்படுகிறது.