Home நாடு இந்தியர்களை பிரதிநிதிக்கும் புதிய கட்சி உருப்பெற்றது!

இந்தியர்களை பிரதிநிதிக்கும் புதிய கட்சி உருப்பெற்றது!

1161
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்தியர்களின் நலன்களை மேம்படுத்துவதற்காக ஒரு புதிய கட்சியை அமைப்பதாக பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி அறிவித்துள்ளார்.

மலேசிய முன்னேற்றக் கட்சி (எம்ஏபி) அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

“ஒரு மக்கள் இயக்கமாக, இந்த கட்சி பக்காத்தான் ஹாராப்பான் அரசாங்கத்தின் கீழ் நம்பிக்கைகள் மற்றும் வாய்ப்புகளை மீட்டெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

அக்கட்சியை வழிநடத்த, வேதமூர்த்தி ஹிண்ட்ராப் அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

அவ்வமைப்பின் புதிய தலைவர் சிறப்பு பொதுக் கூட்டம் ஒன்றின் மூலமாக நியமிக்கப்படுவார் என்றும் அவர் கூறினார்.