கோலாலம்பூர்: தேசிய இணைய பாதுகாப்பு நிறுவனமான, சைபர் செக்யூரிடி மலேசியா சண்டாக்கானில் தங்கும் விடுதி ஒன்றில் படுக்கையில் இருந்த இரு ஆடவர்களின் அடையாளத்தைக் கண்டு பிடித்து விட்டதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் சி.பி. ஹுசிர் முகமட் தெரிவித்தார்.
பொருளாதார விவகார அமைச்சரை சம்பந்தப்படுத்திய இந்த விவகாரம் தொடர்பான ஆய்வறிக்கையை அந்நிறுவனம் காவல் துறையிடம் ஒப்படைத்து விட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், இது குறித்து மேல் விவரங்களை வழங்க இயலாது என்றும் அவர் கூறினார்.
“நாங்கள் இவ்விவகாரம் குறித்து அரசாங்க வழக்கறிஞர் அலுவலகத்தோடு பேசவுள்ளோம். காணொளியில் இருப்பவர்கள் யார் என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றம் தான்” என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.