Home நாடு அஸ்மின் அலியை தொடர்புப் படுத்திய காணொளிகளை வெளியிட்டவரை அறிய மக்கள் விருப்பம்!

அஸ்மின் அலியை தொடர்புப் படுத்திய காணொளிகளை வெளியிட்டவரை அறிய மக்கள் விருப்பம்!

750
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஹசிக் அப்துல்லா அப்துல் அஜீஸுடன் ஓரினச் சேர்க்கை காணொளியில் இருப்பது யாரென்று மக்கள் தெரிந்து கொள்ள விரும்புவதாக பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். இதன் மூலமாக மக்கள் அக்காணொளியின் நம்பக்த்தன்மையை தெரிந்துக் கொள்ள இயலும் என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.

கடந்த மாதம் தனது துணைத் தலைவர் சம்பந்தப்பட்ட நான்கு ஓரினச் சேர்க்கை காணொளிகள் பரவியதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரி யார் என்பதையும் மக்கள் அறிய விரும்புகின்றனர் என்று அவர் கூறினார்.

இந்த வழக்கை விசாரிக்க கட்சி மலேசிய காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

பொருளாதார் விவகார அமைச்சர் அஸ்மின் அலியுடன் தொடர்புடைய ஓரினச் சேர்க்கை வழக்குகளை விசாரிக்க உதவுவதற்காக ஹசிக் மற்றும் ஐந்து நபர்களை ஆறு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை அனுமதி அளித்தது.

தண்டனைச் சட்டம் பிரிவு 377 பி மற்றும் 1998-ஆம் ஆண்டுக்கான தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் விசாரணைக்கு உதவ அவர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.