Home கலை உலகம் சூர்யாவின் கல்வி தொடர்பான கருத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு!

சூர்யாவின் கல்வி தொடர்பான கருத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு!

963
0
SHARE
Ad

சென்னை: அண்மையில் சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 40-வது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யாவின் கருத்துக்கு தமிழக அரசு தரப்பினரிடமிருந்து பல்வேறு மாற்று கருத்துகளும் விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

மூன்று வயதிலேயே மூன்று மொழிகள் திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் எப்படி இதனை சமாளிப்பார்கள்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதற்கு அமைதியாக இருந்தால் இந்த கல்விக் கொள்கை நிச்சயம் திணிக்கப்படும். இதனால் புதிய கல்வி கொள்கை மீதான ஆலோசனைகளை மாற்றங்களை ஆசிரியர், பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து உரக்கச் சொல்ல வேண்டும்” என்று சூர்யா பேசியுள்ளார்

#TamilSchoolmychoice

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

“ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் பல வருடங்களாக உதவி செய்து வருகிறனர். எனவே கல்வி குறித்து பேசுவதற்காக உரிமை சூர்யாவுக்கு உண்டு.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும்வரைவு அறிக்கைமீது கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப் போக்கினை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிப்பதாகவும், சூர்யாவுக்கு தமது ஆதரவு கண்டிப்பாக இருக்கும் எனவும் கமல்ஹாசன் ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்