Home இந்தியா இணையம் வழி ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகளை ஆய்ந்து அறிய ஒரு வாய்ப்பு!

இணையம் வழி ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகளை ஆய்ந்து அறிய ஒரு வாய்ப்பு!

2286
0
SHARE
Ad

சென்னை: தமிழ் மொழியின் வரலாறுகளை, அதன் பெருமைகளை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில் தமிழ் இணையக்கழகம் வரலாற்று சிறப்புகளான கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளை இணையத்தில் அனைவரின் பார்வைக்கும் ஆய்வுக்கும் அறிந்து கொள்வதற்கும் பதிவேற்றம் செய்துள்ளதாக தமிழ் நாடு தகவல் தொழில்நுட்பத் துறை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

எழுத்துகள் கோடுகளாக, குறியீடுகளாக, படங்களாக இருந்து பின் படிப்படியாக வளர்ந்து தற்போதைய எழுத்து வடிவமாக மாறின என்பதற்குப் பனை ஓலைகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றவை சான்றுகளாக உள்ளன.

பெரும்பாலான தமிழ் மன்னர்கள் மற்றும் அவரைச் சார்ந்த மக்களின் வாழ்வுமுறைகள் பற்றி ஆய்வாளர்கள் அறிந்து கொண்டதே கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்ட தகவல்களை வைத்துதான் என்று கூறலாம்.

#TamilSchoolmychoice

திருக்குறள், புறநானூறு, அகநானூறு போன்ற ஒப்பற்ற பல இலக்கியங்களும் ஒலை சுவடிகளால் ஆனவையே. தமிழர்கள் எல்லோரும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமென அற்புதமாக உருவாக்கப்பட்ட இந்த இணையத்தளத்தை கீழே கொடுக்கப்பட்ட இணைப்பில் காணலாம்:  http://www.tagavalaatruppadai.in/inscriptions