Home நாடு ஜூலை 26 நீர் விநியோகம் வழக்கத்திற்கு திரும்ப வேண்டும், ஆயர் சிலாங்கூருக்கு சார்லஸ் எச்சரிக்கை!

ஜூலை 26 நீர் விநியோகம் வழக்கத்திற்கு திரும்ப வேண்டும், ஆயர் சிலாங்கூருக்கு சார்லஸ் எச்சரிக்கை!

927
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வாக்குறுதியளித்தபடி நீர் விநியோகத்தை புதுப்பிக்க ஆயர் சிலாங்கூர் நிறுவனம் தவறினால் அந்நிறுவனத்தின் உயர் நிருவாகத்தில் மறுசீரமைப்பைக் காண நேரிடும் என்று தேசிய நீர் சேவைகள் ஆணையத்தின் (எஸ்பிஎஎன்) தலைவர் சார்லஸ் சந்தியாகு இன்று புதன்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் தெரிவித்தார்.

பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற ஜூலை 23-ஆம் தேதி தொடங்கி திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடை ஜூலை 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்குள் தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

மனிதர்களாக நாங்களும் இந்த நீர் தடைகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளோம். சந்திப்புக் கூட்டத்தின் போது பேசி விட்டோம். வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில், நீர் விநியோகம் மீண்டும் வழக்கமான நிலைக்குத் திரும்பாவிட்டால், ஆயர் சிலாங்கூர் நிருவாகத்தில் மாற்றங்களைச் செய்ய சிலாங்கூர் மந்திரி பெசாரிடம் எஸ்பிஎஎன் கேட்டுக் கொள்ளும்” என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

#TamilSchoolmychoice

வருகிற ஜூலை 23-ஆம் தேதி தொடங்கி திட்டமிடப்பட்டுள்ள சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் (எல்ஆர்ஏ எஸ்எஸ்பி1) மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள ஆயர் சிலாங்கூர் விண்ணப்பித்துள்ளது.

திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகள் ஜூலை 23 அன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே நீடிக்கும், இருப்பினும் எல்லா இடத்திற்கும் மற்றும் பயனர்களின் இருப்பிடம் பொறுத்து மொத்த இடையூறுக்கான நேரம் 84 மணி நேரத்திற்கும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.