Home உலகம் அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே என்ற டிரம்பின் கொள்கை வலுப்பெறுகிறது!

அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே என்ற டிரம்பின் கொள்கை வலுப்பெறுகிறது!

694
0
SHARE
Ad

வாஷிங்டன்: ஜனநாயக கட்சியை சேர்ந்த நான்கு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இனவெறியான கருத்துகளை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தது தொடர்பாக, அவர் மீது கண்டனம் தெரிவிக்கும் வகையில் அந்நாட்டின் பிரதிநிதிகள் சபை வாக்களித்துள்ளது.

ஜனநாயக கட்சி அதிகாரத்தில் உள்ள இச்சபை அதிபர் டிரம்புக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஆதரவாக 240 வாக்குகளும், அவருக்கு ஆதரவாக 187 வாக்குகளும் கிடைத்தன.

ஆனால், இந்த நான்கு பெண்களும் அமெரிக்காவை விட்டு வெளியேற அறைக்கூவல் விடுத்த டிரம்ப் மீண்டும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்.

#TamilSchoolmychoice

டிரம்புக்கு எதிராக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட உடனே, அவரை பதவி நீக்க கோரும் தீர்மானம் கொண்டுவர ஜனநாயக கட்சியை சேர்ந்த உறுப்பினர் அல் கிரீன் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார்.

ஆனால் இவருக்கு ஆதரவாக இதே கட்சியை சேர்ந்த மற்ற உறுப்பினர்கள் தொடர்ந்து ஆதரவு தந்த நிலையிலும் இந்த வேண்டுகோளை ஜனநாயக கட்சியின் தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை.

அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கேஎன்ற கொள்கையை தொடர்ந்து கடைபிடித்து வரும் டிரம்ப், இதனால் பிற நாடுகளில் பிறந்து அமெரிக்காவில் குடியுரிமைப் பெற்றவர்கள் மீது இனவெறி கருத்துகளை பேசி வருகிறார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது தொடர்ந்து வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.