Home நாடு கிளந்தான்: சுல்தான் முகமட், ரஷ்ய பெண்மணி விவாகரத்து!

கிளந்தான்: சுல்தான் முகமட், ரஷ்ய பெண்மணி விவாகரத்து!

1387
0
SHARE
Ad

கோத்தா பாரு: சுல்தான் முகமட், ரஷ்ய பெண்மணியான ரிஹானா ஒக்ஸானா கோர்படென்கோவை விவாகரத்து செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இன்று புதன்கிழமை நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிட்ட செய்தியின்படி, வருகிற ஜூலை 22-ஆம் தேதி சிங்கப்பூர் சிரியா நீதிமன்றத்தில் விவாகரத்து தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூலை 1-ஆம் தேதி விவாகரத்து இறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆதாரங்கள் உறுதிப்படுத்தின.

முன்னதாக ஒரு வருடத்திற்கு முன்பு திருமணமான தம்பதியர் விவாகரத்து செய்ததாக செய்திகள் வந்தன.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், கிளாந்தான் மாநில துணை மந்திரி பெசார் முகமட் அமார் நிக் அப்துல்லா கூறுகையில், இந்த விவகாரம் குறித்து மாநில அரசு அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் பெறவில்லை என்று கூறினார்.

அரண்மனையின் உத்தியோகபூர்வ அறிவிப்பு இல்லாமல் யாரையும் கிளந்தான் இராணி அல்லது சுல்தானா கிளந்தான் என்று பெயரிட முடியாது என்று கிளந்தான் அரண்மனை நேற்று செய்வாய்க்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.