Home வணிகம்/தொழில் நுட்பம் பில் கேட்ஸ் இனி உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் இல்லை

பில் கேட்ஸ் இனி உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் இல்லை

1296
0
SHARE
Ad

நியூயார்க் – கடந்த பல ஆண்டுகளாக உலகின் மிகப் பெரிய பணக்காரராக முதல்நிலை வகித்து வந்த பில்கேட்சை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டாவது இடத்திற்குத் தள்ளினார் அமேசோன் நிறுவனத் தலைவர் ஜெப் பெசோஸ்.

மைக்சோப்ட் நிறுவனத்தின் தோற்றுநரான பில் கேட்ஸ் அதன் பின்னர் பல ஆண்டுகளாக உலகின் இரண்டாவது பணக்காரராகத் தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டார்.

ஆனால், தற்போதைய நிலவரப்படி அவர் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார் என்கிறது புளும்பெர்க் வணிக செய்தி ஊடகம். நேற்று செவ்வாய்க்கிழமையோடு பில் கேட்ஸ் பணக்காரர் பட்டியலில் 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார். அவரைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாவது பணக்காரராக முன்னேறியிருப்பவர் பிரான்ஸ் நாட்டின் பெர்னார்ட் அர்னால்ட் ஆவார்.

#TamilSchoolmychoice

எல்விஎம்எச் (LVMH) என்ற ஆடம்பரப் பொருட்களுக்கான தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் அர்னால்ட்டின் சொத்து மதிப்பு தற்போது 107.6 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. பில் கேட்சை விட சுமார் 200 மில்லியன் டாலர் சொத்து மதிப்பைக் கூடுதலாகக் கொண்டிருக்கிறார் அர்னால்ட்.

2019-இல் மட்டும் தனது சொத்து மதிப்பில் சுமார் 39 பில்லியன் டாலரைச் சேர்த்திருக்கிறார் அர்னால்ட்.