Home நாடு “ஓரினச் சேர்க்கை காணொளி உண்மையானது!”- காவல் துறைத் தலைவர்

“ஓரினச் சேர்க்கை காணொளி உண்மையானது!”- காவல் துறைத் தலைவர்

1318
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஹசிக் அப்துல்லா அப்துல் அஜீஸ் ஓர் அமைச்சருடன் தம்மை தொடர்புப்படுத்திய ஓரினச் சேர்க்கை காணொளியானது உண்மையானது என்று காவல் துறைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஹாமிட் பாடோர் உறுதிப்படுத்தினார்.

எவ்வாறாயினும், இதற்கு முன்னர் பரப்பப்பட்ட காணொளியில் நூறு விழுக்காடு ஒத்துப் போகும் அடையாளங்களை கண்டறிய இயலவில்லை என்று சைபர் செக்யூரிட்டி தெரிவித்ததாக அவர் கூறினார்.

நீதிக்கு கொண்டுவரப்பட்டால் ஒரு விவகாரமாக எனது கருத்துகள் விசாரிக்கப்படும். ஆகவே எனது கடமையை சரிவரச் செய்வதற்கு மக்கள் அந்த பொறுப்பை புரிந்துகொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்என்று நேற்று புதன்கிழமை ஆர்டிஎம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் குறிப்பிட்டார்.