தற்போது அந்த தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு எதிர்வரும் ஜூலை 22 ஆம் தேதி பகல் 2.43 மணியளவில் சந்திராயன் மீண்டும் விண்ணில் பாயும் என இஸ்ரோ தனது டுவிட்டர் தளத்தில் அறிவித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ரூ.1000 கோடி மதிப்பில் சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கியிருக்கிறது.
உலக நாடுகளிலேயே முதல் முறையாக நிலவின் தென்துருவ பகுதிகளை ஆராயும் முயற்சியில் இந்தியா இறங்கி உள்ளது.
வெற்றிகரமான விண்ணில் செலுத்தப்பட்ட உடன், இரண்டு மாத பயணங்களுக்கும் பின் சந்திரயான் -2 நிலவின் தென் துருவப் பகுதியை அடையும்.