Home நாடு ஜோ லோ தகப்பனாரின் 48 மில்லியன் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

ஜோ லோ தகப்பனாரின் 48 மில்லியன் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

699
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 1எம்டிபி நிதி ஊழல் விவகாரத்தில் முக்கிய நபராகத் தேடப்பட்டு வரும், மலேசிய தொழிலதிபர் ஜோ லோவின் தகப்பனார், லேரி லோ ஹொக் பெங்கின் வங்கிக் கணக்கிலிருந்து 48 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான தொகையை பறிமுதல் செய்ய அரசாங்கத்திற்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது,

மூன்றாம் தரப்பினரும் முன்வந்து சொத்துக்களைக் கோராததால், நீதிபதி முகமட் சாய்னி மஸ்லான் துணை அரசு வழக்கறிஞர் ஆரோன் செல்லையாவின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டார்.

லேரிக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்ட போதிலும், அவர் இன்று வெள்ளிக்கிழமை காலை நீதிமன்றத்தில் தோன்றவில்லை.

#TamilSchoolmychoice

கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதியன்று, மூன்றாம் தரப்பினர் யாரேனும் அச்சொத்துகளைக் கோர விரும்பினால் மூன்று மாதத்திற்குள் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருந்தது.