Home நாடு அன்வார், அஸ்மின் உரசலால் பக்காத்தான் ஹாராப்பானில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு!

அன்வார், அஸ்மின் உரசலால் பக்காத்தான் ஹாராப்பானில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு!

785
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் அவரது துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி ஆகியோருக்கு இடையிலான உரசல் பக்காத்தான் ஹாராப்பானை பிளவுபடுத்தக்கூடும் என்று அம்னோ மூத்த தலைவரும் குவா மூசாங் நாடாளுமன்ற தலைவருமான துங்கு ரசாலி ஹாம்சா கூறினார்.

சமூக ஊடகங்களில் நாம் படித்தவற்றின் அடிப்படையில், பிகேஆர் கட்சியில் பிரிவு இருப்பதைப் போல தெரிகிறது. அக்கட்சியில் நிலைத்தன்மை நிலைத்திருக்கும் என்று நம்புகிறோம்என்று அவர் கூறினார்.

வரவிருக்கும் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியினர் வெல்வார்களா என்று தெரியாது, ஆயினும், போதுமான நாடாளுமன்ற இடங்கள் இருந்தால் அது சாத்தியமே என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

பக்காத்தான் ஹாராப்பான் தற்போது எதனை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை டாக்டர் மகாதீர் முகமட் அறிவார் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, மொத்தமாக 27 பிகேஆர் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அஸ்மினுக்கு ஆதரவைத் தெரிவித்ததோடு, அன்வார் கட்சியின் தலைவராக இருந்து உடனடியாக கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.