Home உலகம் தோக்கியோவில் தீவிபத்து ஏற்படுத்தித் தாக்குதல்

தோக்கியோவில் தீவிபத்து ஏற்படுத்தித் தாக்குதல்

1680
0
SHARE
Ad

தோக்கியோ – ஜப்பானிய நகரான கியோத்தோவில் அமைந்திருக்கும் விலங்குகளுக்கான வரைபடக் காட்சிகளை எடுக்கும் அரங்கத்தின் (animation studio) மீது இன்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலின் மாண்டவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்ந்திருக்கிறது.

மேலும் 36 பேர் இந்தத் தாக்குதலில் காயமடைந்திருக்கின்றனர். இவர்களில் சிலர் கடுமையான காயங்களுக்கு இலக்காகியிருப்பதால் மரண எண்ணிக்கை மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

41 வயது நபர் ஒருவன் தாக்குதலுக்கு உள்ளான கட்டடத்தைச் சுற்றி பெட்ரோல் எண்ணெயை ஊற்றி விட்டு அதற்கு தீவைத்தான் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.