கோலாலம்பூர்: ஓரினச் சேர்க்கை காணொளி தொடர்பான விசாரணையில், ஒரு தனிநபரின் நற்பெயரை இழிவுபடுத்துவதற்கும் சேதப்படுத்துவதற்கும் ஓர் அரசியல் கட்சித் தலைவர் தலைமையில் தீய எண்ணத்திலான சதி இருப்பது தெரியவந்துள்ளதாக டத்தோஶ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் கூறினார்.
பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் பரப்பப்பட்ட இந்த காணொளி, நூறாயிரக்கணக்கான ரிங்கிட் செலவில் அத்தரப்பினரால் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, நேற்று வியாழக்கிழமை பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி சம்பந்தப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளி உண்மையானது என்பதற்கான ஆதாரத்தை சைபர் செக்யூரிட்டி உறுதிபடுத்தியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும், சைபர் செக்யூரிட்டி அக்காணொளியில் இருப்பவர்களின் முகங்களை அடையாளம் காண முடியவில்லை என்று அவர் கூறினார்.