Home நாடு அன்வாருக்கு 2/3 ஆதரவு இல்லை, சட்டரீதியான பிரகடனம் பொய்!

அன்வாருக்கு 2/3 ஆதரவு இல்லை, சட்டரீதியான பிரகடனம் பொய்!

633
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தாம் பிரதமராக பதவி ஏற்பதற்கு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருப்பதாக பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறும் சட்டரீதியான பிரகடனத்தில் உண்மையில்லை என்று அவரது உதவியாளர் ஒருவர் மலேசியாகினியிடம் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 3-ஆம் தேதியிடப்பட்ட அந்த உண்மையற்ற அறிவிப்பில், மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைத்திருப்பதால டாக்டர் மகாதீர் முகமட்டிற்கு பிறகு அதிகாரத்தை தாம் ஏற்பதற்காக மாமன்னரின் ஆலோசனைக்கு அன்வார் காத்திருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

பெர்சாத்து கட்சியின் தலைவரான மொகிதின் யாசின் துணைப் பிரதமராக நியமிக்கப்படுவார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

முன்னதாக மொகிதின் மற்றும் அம்னோ தலைவர் அகம்ட் சாஹிட் ஹமீடி ஆகியோர் மகாதீரிடமிருந்து பிரதமர் பதவியை பொறுப்பேற்க அன்வாருக்கு தங்களது ஆதரவை அறிவிக்கும் உறுதிமொழி கடிதத்தில் கையெழுத்திடவில்லை என்று மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.