Home இந்தியா ஹீமா தாஸ்: தொடர்ந்து தங்கம் குவிக்கும் இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை!

ஹீமா தாஸ்: தொடர்ந்து தங்கம் குவிக்கும் இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை!

795
0
SHARE
Ad

புது டில்லி: அனைத்துலக தடகள அரங்கில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் ஹீமா தாஸ், கடந்த 15 நாட்களில் தனது 4-வது தங்க பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

செக் குடியரசில் தபோர் அட்லெட்டிக் மீட் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் ஹீமா தாஸ் தங்கம் வென்றார் . கடந்த புதனன்று நடந்த இந்த போட்டியில் 23.25 வினாடியில் 200 மீட்டரை கடந்து சாதனைப் படைத்தார். 

ஐரோப்பாவில் கடந்த ஜூலை 2-ஆம் தேதி முதல் அனைத்துலக போட்டிகளில் பங்கேற்று வரும் ஹீமா தாஸ் வெல்லும் நான்காவது தங்கமாக இது கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

கடந்த ஜூலை 2-ஆம் தேதி போஸ்னான் தடகள கிராண்ட்பிரிக்ஸ் போட்டியில் 200 மீட்டரை 23.65 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். அதனை அடுத்து, ஜூலை 7-ஆம் தேதி போலாந்தின் குட்னோ தடகள போட்டியில் 200 மீட்டர் பந்தயத்திலும் ஹீமா தங்கம் வென்றார்.