மேலும் 35 பேர் இந்தத் தாக்குதலில் காயமடைந்திருக்கின்றனர். 41 வயது நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு காயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்பகுதியில் திரவம் மூலமாக ஒருவர் தீ மூட்டினார் என்று சாட்சிகள் கூறுகின்றன. மேலும், அங்கிருந்தவர்களை “சாகுங்கள்” என்று அவர் கத்தியாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தோக்கியோவின் கபுகிச்சோ மாவட்டத்தில் கடந்த 2001-ஆம் ஆண்டு ஒரு கட்டிடத்தின் மீது தீப்பிடித்ததில் 44 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பிறகு இந்நாட்டில் நடந்த மிக மோசமான சம்பவமாக இது கொள்ளப்படுகிறது.