Home One Line P1 கொவிட்19: தோக்கியோ தொற்றுக்கான மையப்பகுதியாக மாறுகிறது

கொவிட்19: தோக்கியோ தொற்றுக்கான மையப்பகுதியாக மாறுகிறது

498
0
SHARE
Ad

தோக்கியோ: தோக்கியோவில் புதிய தொற்று மையப்பகுதி வளர்ந்து வருகிறது. புதிய சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்று உள்ளூர் செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது.

ஜப்பானிய தலைநகரில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் வியாழக்கிழமை 367 புதிய கொவிட்19 சம்பவங்களை பதிவு செய்துள்ளனர். இதுவரையில் இல்லாத அதிகபட்ச ஒற்றை நாள் எண்ணிக்கை இது என்று கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நோய்த்தொற்றின் பரவல் மையப்பகுதியைக் கடந்து விரிவடையத் தொடங்கியுள்ளது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

நகரில் 12,000- க்கும் மேற்பட்ட நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. பாதி இந்த மாதத்தில் பதிவாகியுள்ளன.

ஜப்பான் நாடு முழுவதும் 34,500 சம்பவங்களையும், மொத்தம் 1,019 இறப்புகளையும் பதிவு செய்துள்ளது.