Home Featured உலகம் கத்திக் குத்து தாக்குதலில் தோக்கியோவில் 19 பேர் வரை பலி!

கத்திக் குத்து தாக்குதலில் தோக்கியோவில் 19 பேர் வரை பலி!

737
0
SHARE
Ad

(Latest) Selliyal-Breaking-News-Wideதோக்கியோ – ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவுக்கு மேற்கே உள்ள சாகாமிஹாரா என்ற இடத்தில் நடத்தப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் 19 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என ஜப்பானியக் காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.

மாற்றுத் திறனாளிகள் (உடல் ஊனமுற்றோர்) மையம் ஒன்றில் ஜப்பானிய நேரப்படி இன்று செவ்வாய்க்கிழமை காலை, ஒருவன் பலரை கத்தியால் தாக்கினான். இறந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக இருக்கலாம் என ஒரு செய்தி நிறுவனமும், 19 பேர் என மற்றொரு செய்தி நிறுவனமும் எதிர்மாறான தகவல்களை வெளியிட்டுள்ளன.

பலர் இந்தத் தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

20ஆம் வயதுகளில் இருக்கும் அந்தத் தாக்குதல்காரன் பின்னர் அருகிலுள்ள ஜப்பானிய காவல் நிலையத்தில் சரண்டைந்தான்.

அவன் பின்னணி என்ன? ஏன் இந்தத் தாக்குதலை நடத்தினான் என்பது போன்ற விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

அமைதிக்குப் பேர் போன ஜப்பானில் இதுபோன்ற – பலர் ஒரே நேரத்தில் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடையும் சம்பவங்கள் – மிகவும் அபூர்வமாகும்.