Home Featured கலையுலகம் “மலேசிய மக்கள் கபாலியை ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சியை அளிக்கிறது” – ரஞ்சித் பேட்டி!

“மலேசிய மக்கள் கபாலியை ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சியை அளிக்கிறது” – ரஞ்சித் பேட்டி!

815
0
SHARE
Ad

ranjithசென்னை – அனைத்து தரப்பினரும் கபாலி படத்தை இரசிப்பதும், பாராட்டுவதும் தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக அந்தப் படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித் கூறியிருக்கின்றார்.

இன்று, தமிழகத்தின் புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பா.இரஞ்சித் படம் குறித்த தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.

“குறிப்பாக, இந்தப் படம் மலேசிய இரசிகர்களைக் கவருமா, உரிய முறையில் அவர்களை சென்றடையுமா என்ற அச்சம் எனக்கு எப்போதும் இருந்தது. காரணம், மலேசியாவைப் பின்புலமாகக் கொண்ட படம் மலேசிய இரசிகர்களை சென்றடையாவிட்டால், அவர்கள் தங்களை அந்தப் படத்துடன் தொடர்பு படுத்திக்கொள்ள முடியவில்லை என்றால், அதன்பின்னர் அந்தப் படம் வெற்றியடைந்ததாகக் கூற முடியாது. ஆனால், மலேசியாவிலிருந்து எனக்கு வந்து கொண்டிருக்கும் தகவல்கள், குறுஞ்செய்திகள் ஆகியவற்றைப் பார்க்கும்போது மலேசியர்கள் இந்தப் படத்தைப் பாராட்டுகிறார்கள், கொண்டாடுகிறார்கள் என்பதைக் கேள்விப்படும்போது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று இரஞ்சித் அந்தத் தொலைக்காட்சிப் பேட்டியில் கூறியுள்ளார்.