Home நாடு மேலும் 39 மாணவர்கள் மூச்சுத் திணறல், வாந்தியால் பாதிப்பு!

மேலும் 39 மாணவர்கள் மூச்சுத் திணறல், வாந்தியால் பாதிப்பு!

661
0
SHARE
Ad

பாசிர் கூடாங்: இங்குள்ள ஐந்து பள்ளிகளைச் சேர்ந்த மேலும் 39 மாணவர்கள் காற்று மாசுபாடு காரணமாக மீண்டும் மூச்சுத் திணறல் மற்றும் வாந்தி அறிகுறிகளுக்கு ஆளாகியதாக டி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (ஜூலை 18) பாசிர் கூடாங் பகுதியில் இயங்கும் 18 சட்டவிரோத இரசாயன தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக சுற்றுச்சூழல் துறை அறிவித்த போது நடந்தது.

#TamilSchoolmychoice

ஜோகூர்  மாநில சுகாதாரம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியக் குழுத் தலைவர் முகமட் குஸான் அபுபக்கர் கூறுகையில், தஞ்சோங் புத்ரி தேசியப் பள்ளியிலிருந்து 30 மாணவர்களும், கொபொக் தேசியப் பள்ளியிலிருந்து ஆறு மாணவர்களும் கோத்தாமாசாய் தேசியப் பள்ளி, தஞ்சோங் புத்ரி இடைநிலைப்பள்ளி மற்றும் பாசிர் கூடாங் 4 தேசியப் பள்ளிகளிலிருந்து தலா ஒரு மாணவர்களும் இதில் பாதிக்கப்பட்டதாகக் கூறினார்.

நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி, மாணவர்கள் மூச்சுத் திணறல் மற்றும் வாந்தி அறிகுறிகளினால் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாசிர் கூடாங்கில் ஏற்பட்டு வரும் காற்று மாசுபாடு சம்பவங்களை மாநில அரசு ஒருபோதும் இலகுவாக எடுத்துக் கொள்ளவில்லை என்று குஸான் வலியுறுத்தினார்.

இப்போது வரை, சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளும் அவ்வப்போது காற்றின் தரம் உட்பட கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.