Home கலை உலகம் சூது கவ்வும் 2 படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்!

சூது கவ்வும் 2 படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்!

871
0
SHARE
Ad

சென்னை: கடந்த 2013-ஆம் ஆண்டு வெளிவந்து இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் சூது கவ்வும். தமிழ் திரைப்பட வரலாற்றில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய இப்படத்தை அப்போதைய புது முக இயக்குனர் நலன் குமாரசாமி கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருந்தார். தற்போது, இப்படத்தின் இரணடாம் பாகம் தயாராக உள்ளது

இப்படத்தில்  விஜய் சேதுபதி நடித்து தமிழ் இரசிகர்களின் மனதில் தனக்கென ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். மேலும் இப்படத்தில் பாபி சிம்மா, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன்சஞ்சனா ஷெட்டி மற்றும் பலர் நடித்திருந்தனர்

இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது திரைக்கதை மற்றும் இசையாகும். சந்தோஷ் நாராயணனின் இசையில் இப்படத்தின் பாடல்கள் இன்றளவும் மக்கள் இரசித்துக் கொண்டிருக்கின்றனர். தயாரிப்பாளர் சி.வி.குமார்.

#TamilSchoolmychoice

தற்போது சூது கவ்வும் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார். இதற்கான பணிகளும் வேக வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன

சூது கவ்வும் 2 படத்தையும் நலன் குமாரசாமி தான் கதை திரைக்கதை எழுதி இயக்க உள்ளார் என்ற செய்தி சினிமா வட்டாரங்கள் சொல்கின்றன. இவ்வருடம் செப்டம்பர் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று சொல்லப்படுகிறது

நலன் குமாரசாமியின் திரைக்கதையில் உருவாவதால் இப்படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.