Home நாடு பிகேஆர் கட்சித் தலைவர்கள் ஒன்று கூடல், அஸ்மின் நிலை முடிவு செய்யப்படும்!

பிகேஆர் கட்சித் தலைவர்கள் ஒன்று கூடல், அஸ்மின் நிலை முடிவு செய்யப்படும்!

869
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை இரவு போர்ட் டிக்சனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிகேஆர் கட்சி தலைவர்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சியில் அக்கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி நிலை குறித்து முக்கியமான முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 

கட்சியின் தலைவர் உட்பட அனைத்து மாநில கட்சித் தலைவர்களும் இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இந்நிகழ்ச்சிக்கான அழைப்பை ஏற்றுக்கொண்ட பக்காத்தான் ஹாராப்பானின் தலைவர் டாக்டர் மகாதீர் முகமட்டின் வருகை மேலும் உற்சாகத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

அன்வார் மற்றும் அஸ்மினுக்கு இடையிலான வெளிப்படையான உரசல் பின்னணியில் இந்த கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. பொருளாதார விவகார அமைச்சரை உள்ளடக்கியதாகக் கூறப்படும் ஓரினச் சேர்க்கை காணொளிகள் உண்மையானவை என்று நிரூபிக்கப்பட்டால் தனது அமைச்சரவை பதவியில் இருந்து அஸ்மின் விலக வேண்டும் என்று அன்வார் கூறியதைத் தொடர்ந்து கட்சியில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது.

அஸ்மினின் ஆதரவாளர்கள் அவரை ஆதரித்து வரும் வேளையில், அன்வாரை ஆதரித்து இன்று மாநிலத் தலைவர்கள் குழு ஒன்றினை அமைத்துள்ளனர்.