Home நாடு 12 மில்லியனுக்கு மேல் நஜிப்பின் வங்கியில் செலுத்தப்பட்டது!

12 மில்லியனுக்கு மேல் நஜிப்பின் வங்கியில் செலுத்தப்பட்டது!

674
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த 2014 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் இரண்டு அம்பேங்க் வங்கிக் கணக்குகளில் 12,379,063 ரிங்கிட் செலுத்தப்பட்டதாக முன்னாள் அம்பேங் தொடர்பு துறை மேலாளர் ஜோஹானா யூ ஜிங் பிங் தெரிவித்தார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கும், 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கும் இடையில் 906 என்று முடிவடையும் நஜிப்பின் தனியார் வங்கி கணக்குக்கு மொத்தம் 6,779,063 ரிங்கிட் செலுத்தப்பட்டதாகவும், 2015-ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 880 என்று முடிவடையும் கணக்குக்கு 5.6 மில்லியன் ரிங்கிட் செலுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிகமான பண கொடுப்பனவுகளை கவனக்குறைவினால் மட்டுமே வங்கி அனுமதிக்க முடியுமே தவிர, பணத்தை இவ்வாறு செலுத்துவதற்கான நடைமுறை அசாதாரணமானது என்று கூறிய யூ, சம்பந்தப்பட்ட வங்கி குறிப்பிட்ட தரப்பினருக்கு அறிக்கை அளிக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் குறிப்பிட்டார்.