Home Video ஜாக்பாட்: ரேவதி – ஜோதிகா இணைந்து கலக்கும் நகைச்சுவைப் படம்

ஜாக்பாட்: ரேவதி – ஜோதிகா இணைந்து கலக்கும் நகைச்சுவைப் படம்

1065
0
SHARE
Ad

சென்னை – அதிகமான விளம்பரங்களோ, விரிவான செய்திகளோ எதுவும் இல்லாமல் மிகக் குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்டிருக்கும் ‘ஜாக்பாட்’ என்ற படத்தின் முன்னோட்டம் (டிரெய்லர்) அண்மையில் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டு அதிகமான பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது.

ரேவதியும், ஜோதிகாவும் இணைந்து கலக்கும் இந்தப் படத்தைக் கல்யாண் இயக்கியிருக்கிறார். மேலும் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ஆன்ந்த்ராஜ் போன்ற நடிகர்களும் இந்தப் படத்தில் இணைந்து நகைச்சுவை விருந்து படைத்திருக்கின்றனர்.

மூன்று நாட்களுக்கு முன்னர்தான் வெளியிடப்பட்டது ‘ஜாக்பாட்’ திரைப்படத்தின் முன்னோட்டம். ஆனால் அதற்குள்ளாக 2.3 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை யூடியூப் தளத்தில் மட்டும் ஈர்த்திருக்கிறது இந்தப் படம்.

#TamilSchoolmychoice

அடுத்த வாரம் ஆகஸ்ட் 2-ஆம் தேதி ‘ஜாக்பாட்’ திரைப்படம் உலகம் எங்கும் திரையரங்குகளில் அரங்கேற்றம் காணவிருக்கிறது.

அந்தப் படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: