Home உலகம் ஹாங்காங் : ஆயிரக்கணக்கான ஜனநாயகப் போராட்டவாதிகள் விமானநிலையத்தில் போராட்டம்

ஹாங்காங் : ஆயிரக்கணக்கான ஜனநாயகப் போராட்டவாதிகள் விமானநிலையத்தில் போராட்டம்

836
0
SHARE
Ad

ஹாங்காங் – சீனாவின் ஒரு பகுதியாகவும் – அதே வேளையில் தனி ஜனநாயகப் பிரதேசமாகவும் இயங்கி வரும் ஹாங்காங்கில் ஜனநாயகம் தொடர்ந்து மலர்ந்திருக்க வேண்டும் என்ற நோக்கில் அந்நாட்டு விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான போராட்டவாதிகள் திரண்டு குந்தியிருப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த வார இறுதியில் ஜனநாயகப் போராட்டவாதிகள் நடத்திய பேரணியில் கூலிக்கு அமர்த்தப்பட்ட குண்டர் கும்பல்கள் போராட்டக்காரர்கள் மீதும், பாதசாரிகள் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும் ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் காவல் துறையினர் மெத்தனம் காட்டி வருகின்றனர் என்றும் ஜனநாயகப் போராளிகள் கூறியிருக்கின்றனர்.

நாளை சனிக்கிழமை (ஜூலை 27) கைகலப்பு சம்பவங்கள் நடைபெற்ற இடத்தை நோக்கி அணிவகுத்து போராட்டவாதிகள் செல்லவிருப்பதாகக் கூறியிருக்கின்றனர். ஆனால் அந்தப் பேரணிக்கு அனுமதி இல்லை என காவல் துறையினர் கூறிவிட்டனர்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து இரு தரப்புகளுக்கும் இடையே மோதல்கள் வெடிக்கலாம் என அஞ்சப்படுகிறது.